சந்திரா தங்கராஜ், தேனி மாவட்டத்திலுள்ள கூடலூரில் பிறந்தவர்.
தற்போது சென்னையில் வசிக்கிறார்.ஆறாம்திணை, ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றிய இவர், பின்பு சினிமாதுறையில் பணிபுரிந்து தற்சமயம் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
“பூனைகள் இல்லாத வீடு” “காட்டின் பெருங்கனவு” “அழகம்மா” ஆகிய சிறுகதை தொகுப்புக்களும் “நீங்கிச் செல்லும் பேரன்பு” “வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்” ஆகிய கவிதை தொகுப்புக்களும் வெளிவந்திருக்கின்றன.
”புதுமைபித்தன் நினைவுச் சிறுகதை பரிசு” சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான “ஆனந்த விகடன் விருது” நெய்தல் அமைப்பின் “சுந்தரராமசாமி விருது” விஜய் TV யின் இலக்கியத்துக்கான “சிகரம் தொட்ட பெண்கள் விருது” உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.
