பாரதி கிருஷ்ணகுமார் ஒரு அறியப்பெற்ற தமிழ் ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர். சமூகத்தில் நடந்த வன்முறைகளை, சமூகச் சிக்கல்களை இவர் தனது ஆவண நிகழ்படங்களில் பதிவுசெய்துள்ளார்.
இவரை பற்றிய சில பதிவுகள்
”கூட்டத்தில் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் அவர்களைச்சிரிக்கவும், கதறியழவும், கொந்தளித்து எழவும் செய்யக்கூடிய அரிய, அவருக்கே உரிய பேச்சாற்றல் காரணமாக, அதன் அடிப்படை பலமாக அவருக்கு உள்ள வாசிப்பு காரணமாக, அமைப்புகள் அவரைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தன. முற்போக்குச் சிந்தனைகளை அவர் முன்வைத்த விதம் பலரையும் அமைப்புகளுக்கு உள்ளேயே கூட ஈர்த்தது என்பதும் உண்மை.”
‘
ஆவண நிகழ்படங்கள்
- இராமய்யாவின் குடிசை (2005)
- என்று தணியும் (2007)
- எனக்கு இல்லையா கல்வி ? (2009)
- உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி(2012)
