கனடா பாராளமன்ற உறுப்பினர் கெளரவ. ஹரி ஆனந்தசங்கரி கலந்து சிறப்பிக்கும் சுவடுகள் 02/09/22

கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) என அழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனடிய அரசியல்வாதியும்லிபரல் கட்சி உறுப்பினரும், மனித உரிமை வழக்கறிஞரும் ஆவார். இலங்கைத் தமிழரான இவர் 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.

கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ. ஆனந்தசங்கரியின் இரண்டாவது மகன் ஆவார். இலங்கையில் பிறந்த இவர் தனது 10வது அகவையில் 1983 இல் தனது தாயாருடன் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தார்.

 ரொறன்ரோவில் உள்ள ஓஸ்குட் ஹால் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்று 2006 இல் பட்டம் பெற்றார். பின்னர் ரொறன்ரோவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.கனடிய லிபரல் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட பழைமைவாதக் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார்.

கரி ஆனந்தசங்கரி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வைர விழா மற்றும் பொன் விழா விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

தமிழ் கனேடியரான ஹரி ஆனந்தசங்கரி இரண்டாவது தடவையாகவும் வென்று கனேடிய பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

ரொரண்டோவின் – ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களைவ விட பெரும்பான்மையான வாக்குகளை பெற்று சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தார்.

அவரை எதிர்த்து கன்சர்வேடிவ் லெஸ்லின் லூயிஸ் மற்றும் மற்றொரு கனேடிய தமிழரான என்.டி.பி. வேட்பாளர் காந்தரட்ணம் சாந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

2011 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட லிபரல் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி 34.8 சதவீத வாக்குளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் வேட்பாளர் 31.6 சதவீதம் வாக்குகளையும் என்.டி.பி. வேட்பாளர் 31 சதவீத வாக்குகளை பெற்றிருந்தனர்.

ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் புதல்வராவார்.

13 வயதில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஹரி ஆனந்தசங்கரி, புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றில் பல அரிய செயல்களைச்; செய்தவர்.

கனடாவில் தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட வன்முறை சார்ந்த ஒரு கலாச்சாரத்தை அழிப்பதற்கான கனடிய தமிழ் இளைஞர்கள் சேவை நிலையத்தை ஆரம்பித்து கனடாவில் தமிழ் இளைஞர்களின் முரண்பாடுகளைத் தீர்க்கப்பாடுபட்டவர்.

அதேபோல கனடாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான பங்களிப்பை வழங்கியவர்.

இதற்கும் மேலாக கனடியத் தமிழ்க் கொங்கிரஸ் என்ற அமைப்பின் வளர்ச்சிக்கான பொருளாதார உதவுனராக இருந்தவர்.

வழக்கறிஞரான ஹரி ஆனந்தசங்கரி, சிறப்பான அரசியல்வாதியாகவும் பெயர்பெற்றுள்ளார்.

லிபரல் கட்சி தலைவராக ஜஸ்ரின் ரூடோவை தேர்வு செய்வதிலும் ஹரி ஆனந்தசங்கரி தீவர பங்காற்றியவர்.

அதுபோலவே பிரம்டன் நகரில் இடம்பெற்ற லிபரல் கட்சியின் மீளெழுச்சிக்கான தேர்தல் பிரச்சார மாநாட்டில் தனது படை பட்டாளங்களுடன் கலந்து கொண்டு தான் சமூகத்தால் மதிக்கப்படும் ஒரு நபர் என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்தியிருந்தார்.

இம்முறை கனடிய பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

லிபரல் கட்சியின் சார்பில் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்டார். கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இரு தமிழர்களும், கனடா மக்கள் கட்சி சார்பில் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹரி ஆனந்தசங்கரியின் இரண்டாவது வெற்றி புலம் பெயர் தமிழ் சமூகத்தினரிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் வாழும் தேசங்களில் அரசியல் ரீதியில் நிலைநாட்டிவரும் சாதனைகளில் ஹரி ஆனந்தசங்கரியின் சாதனையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top