திருமதி. அனந்தி சசிதரன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம்

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக்ததின் தலைவியும்,வடமாகாண சபை முன்னாள் அமைச்சருமான திருமதி.அனந்தி சசிதரன் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம்.

அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan, பிறப்பு: செப்டம்பர் 10, 1971) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியையும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.

ஆசிரியையான அனந்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவி ஆவார். எழிலன் 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனார். இவர் சரணடைந்ததை இலங்கை அரசு மறுத்து வருகிறது ஆனாலும், தனது கணவர் இலங்கை அரசின் காவலில் இன்னமும் உள்ளார் என அனந்தி நம்புகிறார், அவரது விடுதலைக்காக பரந்த அளவில் குரல் கொடுத்து வருகிறார் ஈழப்போரில் காணாமல் போனோர் மற்றும் விதவைகளின் குடும்பங்களுக்காக அனந்தி குரல் கொடுத்து வருகிறார்.

அனந்தி 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்டு, இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் (87,870) பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவானார்.இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். அனந்திக்கு 1வது வட மாகாண சபையில் சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையிடும் பணி வழங்கப்பட்டுள்ளது

2018 அக்டோபர் 21 இல் இவர், தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைக்க, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார்

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top