சித்தார்த்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், உடுவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வி. தர்மலிங்கத்தின் மகன் ஆவார்
2009 இல் ஈழப் போர் முடிவடைந்ததை அடுத்து, புளொட் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (ததேகூ) இணைந்தது. சித்தார்த்தன் 2013 மாகாண சபைத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வட மாகாண சபைக்குத் தெரிவானார். இவர் தனது பதவிப் பிரமாணத்தை சுன்னாகத்தில் பிளொட் செயலாளரும் சமாதான நீதவானுமாகிய சுப்பிரமணியம் சதானந்தன் முன்னிலையில் 2013 அக்டோபர் 14இல் எடுத்தார்.
சித்தார்த்தன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 53,743 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 23,840 வாக்குகளால் இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
