இலங்கையின் தற்போது நிலவரங்கள் தொடர்பான சிறப்பு சதுரங்கம்.

FOCUS THAMIL April 10, 2022, சதுரங்கம்

ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், பாராளமன்ற உறுப்பினருமான கௌரவ. மனோ கணேசன் கலந்துகொள்ளும் சமகால அரசியல் நிலவரங்களை ஆராயும் அரசியல் களம்

நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள

Mobile- 0409 829 499

WhatsApp/viber +61 409 829 499

www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்

மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் மேலக மக்கள் முன்னணி என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு முதன் முதலில் 2001 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 தேர்தலில் தனது சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.அதே வேளையில் கொழும்பு மாவட்டத்தில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவரது சகோதரர் பிரபா கணேசன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும், பிரபா கணேசன் பின்னர் இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து கொண்டார்.

மனோ கணேசன் 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபை உறுப்பினரானார். 2014 மாகாண சபைத் தேர்தலில் மேற்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மனோ கணேசன் 2015 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்ம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோருடன் இணைந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார். இக்கூட்டணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு ஆறு இடங்களைக் கைப்பற்றியது. மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.]மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் 2015 செப்டம்பர் 4 அன்று இவர் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது அமைச்சின் கீழ் அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலகம், அரசு சாரா நிறுவன செயலகம் ஆகிய அரசுத் திணைக்களங்கள் இருந்தன. 2019 நவம்பரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top