நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம்

அரசியல் பத்தி எழுத்தாளர்,  சமூக செயற்பாட்டாளருமான நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம்26/June/22 ஞாயிறு, Sydney /Melbourne  நேரம் இரவு 8.30மணிக்கு, www.Focusthamil.com இணைய வானொலியிலும், எமது முகநூல் நேரலையிலும் இடம்பெறுகிறது.

நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. ‘பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் இன்னும் நூலாக்கப்படாமலேயே உள்ளன. துரதிஸ்டவசமாக தனது பெருமளவான படைப்புக்களை யுத்த இடப்பெயர்வுகளின்போது இழந்துவிட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பில் நேர்மறை என்ற இருதுருவங்களாக உருவாகியுள்ள அணிகள் மத்தியகு களப்பணியாளர்களில் ஒருவர். தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் சமாந்தரப்பயணிகளில் ஒருவர். அந்தப் போராட்டத்தின் எழுச்சி, வீழ்ச்சி, அதற்கான பின்னனி, தமிழ்தேசியம், அதன் அவசிய திருத்தங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார்.

நிலாந்தன் (பி. 1965) கவிஞர், ஓவியர், கார்ட்டூனிஸ்ட், நாடக எழுத்துருவாக்கி, அரசியல் கட்டுரையாளர், சமூக, கலை இலக்கிய விமர்சகர். யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார். ‘பிள்ளையார் பேரோவியங்கள்’ என்ற தலைப்பில் ஓவியக்காட்சி நடத்தியிருக்கிறார். அரசியல் இலக்கியம் தொடர்பாக 1985 இலிருந்து தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது நூல்கள் : ‘மண் பட்டினங்கள்’, ‘வன்னி மான்மியம்’, ‘யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே’, ‘நவீன பஸ்மாசுரன்’, ‘இனி எனது நாட்களே வரும்’, ‘யுகபுராணம்.’ மின்னஞ்சல்:

nillanthan@gmail.com இணையதளம்: nillanthan.net

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top