போராளியாக- ஊடகவியலாளராகவும், சமூக அரசியல் செயற்பாட்டாளருமான திரு.மனோரஞ்சன் எம்முடன் இணைகிறார்

Focus Thamil வழங்கும் சுவடுகள் 14/10/22

மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணி செல்வதுரை ரவீந்திரன் வழங்கும்

அரசியல் வரலாற்றுத்தொடர்.

இன்றைய நிகழ்வில் எங்களுடன் இணைபவர் செல்லையா மனோறஞ்சன் .
போராளியாக – ஊடகவியளாளராக – சமூக/அரசியற் செயற்பாட்டாளராக – அறியப்பட்ட மனோரஞ்சன் மும் மொழிகளிலும் சரளமாகப் பேசவும்  எழுதவும் கூடிய பன்முக ஆளுமையைக் கொண்டவர்.
இலங்கையின் மத்திய பகுதியில் பல்லின மக்கள் வாழ்ந்த பிரதேசத்தில் அவருடைய இளமைக்கலமும் கல்வியும் அமைந்திருந்த.
நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் நேரடிச் சாட்சியாக இருந்த அவலமும் அவருக்கு நேர்ந்தது. தொடர்ந்து அவருடைய பெற்றோர்களின்  பூர்வீக பிரதேசமான மன்னாருக்கு இடம் பெயந்ததுடன்  NLFT  இயக்கத்துடன் இணைந்து ஆயுதப்போராட்டத்திலும்  பயணித்தவர்.
தமிழ் சூழலில் போராடும் உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதிலிருந்து ஒதுங்கி  கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளான பலரை யாழ்-மாவட்டத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட பின்னணியும் அவருக்கு உண்டு.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சனை தீர்விற்கான முயற்சியில் சிங்கள,தமிழ் மக்கள் மத்தியில் தீவிரமான அரசியல் பிரச்சார வேலைகளில்  ஈடுபட்டவர் மனோரஞ்சன் . இலங்கையின் அரச ஊடகத்துறையிலும்  பொறுப்பான பணிகளிலிருந்து இயங்கியவர் இவர்.
இக்காலகட்டத்தில்  அமுது என்ற சஞ்சிகையை உருவாக்கிய மனோரஞ்சன் அதன் ஆசிரியராக இருந்து செயற்பட்டவர்.
புலம்பெயர்ந்த பின்னரும் தொடச்சியாக தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைக்காக –  தமிழ் சமூகத்துக்குள் நிலவிய ஜனநாயக மறுப்புக்காக – படுகொலைகளுக்கெதிராக – அவர்களுக்கான நீதிக்காக –  குரல் கொடுத்து வருகிறார் மனோரஞ்சன். Demons In Paradise என்னும் விருதுபெற்ற விவரணத் திரைப்படத்தில் பாத்திரமாகவே வாழ்ந்தவர் அவர். அண்மையிலும் இலங்கையில் இடம்பெற்ற அரக்கலய என்ற அறப்போராட்டத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தவர் மனோரஞ்சன்….
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top