திருநாவுக்கரசு சிறிதரன் என்பவர் தமிழ் அரசியற்பரப்பில் தோழர் சுகு என நன்கு அறியப்பட்டவர் . அவருடைய மாணவப்பருவத்திலிருந்தே அரசியல் செயற்பாட்டாளராக இயங்கியவர். 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து ஈழப்புரட்சி அமைப்பு (EROS) அதன்பின்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி(EPRLF) , pathmanapa EPRLF, தமிழர் சமூக ஜனநாயக்க் கட்சி(SDPT) என்று 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் அரசியல் பரப்பில் இயங்கிவருபவர். ஆரம்பகாலத்தில் ஈழமாணவர் பொதுமன்றம்(GUES) மாணவர்கள் மத்தியில் பரந்த ஆதரவுத்தளத்தை உருவாக்குவதில் காத்திரமான பங்களிப்பை வளங்கியவர். அதே போல் EPRLF இன் ஏனைய வெகுஜன அமைப்புக்களைக் மக்கள் மத்தியில் கட்டுவதிலும் தோழர்களை அரசியல் ,த த்துவார்த்த ,கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுப்பதிலும் பிரதானமான பங்களிப்பை நல்கியவர்.அதற்காக ஆரம்பகாலங்களில் வடகிழக்கு மற்றும் தென்பகுதியிலும் அரசியல் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவர் . குறிப்பாக ஆரம்பகாலங்களிலிருந்து ஈழமாணவர் குரல் முதல் கண்ணோட்டம் வரை கட்சியின் வெளியீடுகளில் எல்லாம் தொடர்ச்சியாக எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வந்தவர். 1984ம் ஆண்டு அரச படைகளால் கைதுசெய்யப்பட்டு கடும் சித்திரைவதைகளை அனுபவித்தவர். வெலிகடை சிறையில் இருந்த காலத்தில் இயக்க வேறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகளாகவிருந்த சகல விடுதலை அமைப்புக்களின் உறுப்பினர்களுடனும் நட்பையும் தோழமையையும் பேணியவர். 1987ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் விடுதலை செய்யப்பட்டார் .கட்சியின் முதலாவது மற்றும் இரண்டாவது காகங்கிரசில் மத்தியகுழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் . Pathmanaba EPRLF கட்சியில் செயலாளர் நாயகமாக இயங்கியவர். தற்போது தமிழர் சமூக ஜனநாயக கட்சியில் அதன் தலைவராகவும் இயங்கிவருகின்றார்.
- +61 409 829 499
- focusthamil2021@gmail.com
- World Tamil Radio
