அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் (ATC)
முன்னாள் விக்டோரியா மாநில தலைவரும், இயக்குனருமான
திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார்.
இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை [Australian Advocacy for Good
Governance in Sri Lanka] என்ற அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், தற்போதைய
செயலாளரும் ஆவார்.
இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் – சர்வதேச கூட்டு [Voice for Democracy in Sri Lanka –
International Collective] எனும் அமைப்பிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.
Melbourne 3CR சமூக வானொலியில் ஈழத்தமிழர்களின் அரசியல் விமோசனம் மற்றும் மனித
உரிமைகளுக்காக 1997 – 2002 காலப்பகுதியில் வாராந்த ஆங்கில நிகழ்ச்சிகள் படைத்தவர்.
தற்போது St Vincent de Paul Society தொண்டு நிறுவனத்தில் பகுதிநேர பணியாற்றும் இவர்,
இலங்கையில் ஜனநாயகம், நீதி, சமத்துவத்தும், மனித உரிமைகளுக்காக தொடர்ந்து பிற சமூகத்தலைவர்களுடன் இணைந்து குரல் கொடுத்து வருகிறார்.
