திரு.முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கும் காலத்தின் பதிவுகள்

முருகேசு சந்திரகுமார்

இவர் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக்குழுவின் சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான உறுப்பினராக முதற்தடவையாக தெரிவு செய்யப்பட்டார். பின்னர், 2010 தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்ட்டார்.

பளைஇயக்கச்சியில் பிறந்தவர். திருநகர் வடக்கு, கிளிநொச்சியில் வசிக்கும் இவர், ஓர் ஊடகவியலாளர். 1980களின் முற்பகுதியில் ஈழமக்கள் புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து போராளியான இவர் வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பாளராக அந்த இயக்கத்தின் சார்பில் பதவி வகித்தவர்.

”இன்று தமிழ் மக்களிடம் யதார்த்தமான தெளிவு உண்டு. உலக ஒழுங்கு, சர்வதேச அரசியல், பிராந்திய ஆதிக்கம் இவற்றுக்குள் எமக்கான உரிமைகளையும், அபிவிருத்திகளையும் ஏக காலத்தில் நிகழ்த்திட வேண்டும்.
கண் முன்னே பெற்றுக் கொண்ட பெரும் படிப்பினையொன்றை கண்டு பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டன..
வாதங்களை முன்வைத்து வியாக்கியானங்களை பேசுபவர்களால் எதுவும் நடக்கப்போவதில்லை.
வெறும் காலத்தையும், நேரத்தையும் விரயம் செய்து 5 ஆண்டுகளுக்கொரு முறை மீண்டும் மீண்டும் புரிதலற்ற பல்லவிகளை கூறிக்கொண்டு இருப்பார்கள்.
தமிழ் மக்கள் அரசியல் அதிகாரங்கள் மற்றும் அது சார்பிலான முன்னோக்கிய பயணம் தொடர்பில் விட்டுக் கொடுப்புக்களை செய்வதற்கு நாங்கள் எக்காலமும் தயாராக இல்லை…
அதை மாத்திரம் பேசிக்கொண்டு அன்றாட வாழ்வியல் மற்றும் சமூக நலன்சார் அபிவிருத்தியையும் இழக்க தயாராக இல்லை…
களயதார்த்தமற்று வெறும் உணர்ச்சிகரமான வாய்வீச்சு போக்கு எங்களை மீண்டும் பாதாளத்தை நோக்கியே நகர்த்தும். அதற்கான கடந்தகால உதாரணங்கள் எம்மிடம் நிறைய உண்டு.
அனைத்தையும் அறிந்து தெளிந்து சமத்துவமாக சமூக நீதிக்கான குரலாகவும், சமச்சீரான அபிவிருத்தியை நிகழ்த்திக்காட்டும் வீரியத்துடனும்”..

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top