ஐங்கரன் விக்கினேஸ்வரா
—————————————-
ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலமாக அறிமுகமானவர். சார்ள்ஸ், நவீனன் எனும் புனைபெயர்களாலும் நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர். இவரது படைப்புகளால் பலரதும் கவனத்தை ஈர்த்தவர்.
இதுவரை 12 கவிதைத் தொகுதிகளை படைத்துள்ளார். இவற்றில் மூன்று தொகுதிகள் ஹைக்கூ கவிதைகளாகும். அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னும் இருட்டினில், உறக்கம் தேடும் உலகிற்காய், வெண்பனிச் சுவடுகள், காற்றோடு பேசுதல், அக்னிப் பிரவேசம், உள்மன யாத்திரை
புதுக்கவிதை தொகுதிகளும், உனக்குள்ளேயே உள்ளிருப்பு, இழப்புக்களை இழப்போம், கல்லறைக்குள் கதிரவன் ஆகிய ஹைக்கூ கவிதைத் தொகுதிகளையும் படைத்துள்ளார். கல்லறைப் பூக்கள், இன்னொரு விழிப்பு ஆகியன நூலுருப்பெறாதவையாகும்.
அத்துடன் “கல்லறை மேலான காற்று’ கவிதை தொகுதியை தொகுத்தளித்தவரும் இவரே. இளைய வயதிலேயே ”சிறுவர் இலக்கியம்” பற்றிய நீண்ட இலக்கிய ஆய்வினையும் மேற்கொண்டவர். சிறுவர் பத்திகைகள், சிறுவர் இலக்கிய நூல்கள், ஈழத்துச் சிறுவர் இலக்கியம் பற்றிய ஆய்வினையும் மேற்கொண்டவர்.
யாழ் பொதுசன நூல்நிலையம் அழிக்கப்பட்ட கொடிய செயல் உணர்வுக் கூர்மையுள்ள இளம் வயதினரை கடுமையாக தாக்கியுள்ளது. ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய ‘அணையாத அறிவாலயம்’ கவிதை
தொகுப்பின் அடிநாதமாக ஒலிப்பது ஓர் எழுச்சிக் கீதம் நாம் பெற்றுக்கொண்ட விழிப்பினை நீடித்து வைத்துள்ளது என
கவிஞர் இ. முருகையன் இந்நூலின்
முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளில் சிறப்பான கவனத்தை ஈர்ப்பவராக இவர் விளங்குகின்றார்.
வசந்தம் வெளியீட்டகம்
அக்னிப் பிரவேசம்
✍️அணையாத அறிவாலயம்
✍️இன்னமும் இருட்டினில்
✍️இழப்புக்களையும் இழப்போம்
✍️உனக்குள்ளேயே உள்ளிருப்பு
✍️உறக்கந்தேடும் உலகிற்காய்
✍️உள்மன யாத்திரை
✍️கல்லறை மேலான காற்று
✍️கல்லறைக்குள் கதிரவன்
✍️காற்றோடு பேசுதல்
✍️தீபவண்ணங்கள்
✍️விடியலின் கானம்
✍️வெண்பனிச் சுவடுகள்
