FOCUS THAMIL May 08, 2022, சதுரங்கம்
கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளாதாரதுறை சிரேஷ்டபேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால இலங்கை நிதிநிலைமை நெருக்கடி தொடர்பான அரங்கம்
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவை, இலங்கை சமப்படுத்திக் கொண்டே, முன்னோக்கி நகரும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார்.
”இந்தியாவையும் சீனாவையும் தனக்கு சாதகமாக இலங்கை அழகாக கையாளும். அது கையாண்டு கொண்டு இருக்கிறது. தனக்கு எப்போது சீனா வேண்டுமோ, அப்போது சீனாவை நோக்கி இலங்கை போகும். எப்போது தனக்கு இந்தியா வேண்டுமோ அப்போது இந்தியாவை நோக்கி போகும். வர்த்தகம் என பார்த்தால், முன்னர் இந்தியா இருந்த போதிலும், இப்போது சீனா முதல் இடத்தில் உள்ளது.
இலங்கையிலுள்ள முழு பொருட்களும் சீன பொருட்கள் தான் உள்ளன. இலங்கையில் சீன பொருட்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்தியாவை தள்ளி வைக்க முடியாது என்ற நிலையில் தான், திருகோணமலை எண்ணெய் குதங்கள், யாழ்ப்பாணம் தீவுகள், கொழும்பு முனையம், ஆகியவற்றை கொடுத்து சமப்படுத்திக் கொண்டு செல்வதாகவே நான் பார்க்கின்றேன்” என அவர் குறிப்பிட்டார்.
சீனாவிற்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியோ அல்லது இந்தியாவிற்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியோ இலங்கை ஒருபோதும் செயற்படாது என அவர் குறிப்பிடுகின்றார்.
இரண்டு நாடுகளையும் தங்களுக்கு ஏற்ற வகையில் சமப்படுத்திக் கொண்டு, இலங்கை முன்னோக்கி நகரும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கூறுகின்றார்.
நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
Mobile- 0409 829 499
WhatsApp/viber +61 409 829 499
www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்
