07ம் திகதி யூலை மாதம் திரு,லட்சுமணன் முருகபூபதியுடன் சுவடுகள் நிகழ்ச்சியிலே செல்வதுரை ரவீந்திரன், அவரது இலங்கை பயணம் குறித்தும், அங்கு “இலங்கை மாணவர் கல்வி நிதியம்” ஆற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
எமது அன்புக்குரிய மூத்த எழுத்தாளரும், எழுத்தாளர்களை எப்போதுமே ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒருவருமான திரு முருகபூபதி பல படைப்புகளை தந்தவர், சமூக சேவையாளர்.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் இலங்கையிலே பிறந்த ஊடகவியலாளர்,பத்திரிகையாளர்,எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்கள் இன்றும் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டு தொடர்ச்சியாக வாரம் தோறும் பல பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளும் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நேர்மையான எழுத்தாளர்.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் 2022. இந்த விருதுகள் வருடம் தோறும் இலக்கியவாதிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு சிறந்த விருதாகும். எழுத்தாளர், படைப்பாளி, ஆசிரியர் இப்படி பல முகங்களை கொண்ட அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரிலே வாழுகின்ற திரு முருகபூபதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
